SSLF CITY & HOUSING ADD

Wednesday, June 3, 2015

“RIGHT DECISION IN RIGHT TIME WITH THE LEAD OF RIGHT PERSON IN RIGHT PLATFORM”


திட்டங்கள் – நடவடிக்கைகள்
SSLF CITY & HOUSING: STAR TEAM


BREAD EARNING HOURS

மூன்று மணிக்கு எழுந்து முனிவனாகலாம். நான்கு மணிக்கு எழுந்து ஞானியாகலாம். ஐந்து மணிக்கு எழுந்து அறிஞனாகலாம். ஆறுமணிக்கு எழுந்து மனிதனாகலாம். சாதாரணமாக உள்ளவர்கள் ஆறு மணி, ஏழு மணி என்று துயில் எழுவதில் நமக்கொன்று மில்லை. ஆனால் நாமோ நமது பிற்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு காலத்தில் இதனை அடையவேண்டும் என்ற திட்டங்களை மனதில் கொண்டுள்ளோம். 

நாம், நமது கனவினை நனவாக்க வேண்டுமானால், சிறிதளவாவது தியாகம் செய்ய வேண்டும். எதனை? எப்படி? சிந்தித்தால் தெளிவு பிறக்கும். நமது இலக்கு எட்டாதத் தொலைவில் இருந்தாலும், நமது மனக் கண்ணின் முன்பு நிறுத்தி வைத்தால் இந்த தியாகம் ஒரு பொருட்டாகவே தெரியாது. காலை கண் விழிப்பது முதலில் ஒருமணி நேரம் முன்னோக்கி செல்லவேண்டும். அவ்வளவே. நாம் முன்னேற இதனைச் செய்வதில் தடை ஏதும் இருக்காது என்றே எண்ணுகின்றேன்.

இதனால் என்ன கிடைக்கும். வண்டியில் பூட்டப்பட்ட, கண்களுக்குப் பட்டையிடப்பட்ட குதிரை செல்வதைப் போலவோ, வைக்கோல் பொதியினை ஏற்றி செல்லும் காளைகள் போலவோ நாம் இருந்து அன்றாடம் செய்வதையே செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த செயலை மாற்ற, நம் வாழ்வில் மாற்றத்தினை கொண்டு வர எடுக்கும் முதல் பயிற்சியே இது. இந்தபயிற்சி நம்மை ஒரு ரேஸ் குதிரையாகவோ, ஜல்லிக்கட்டு காளையாகவோ மாற்றி விடுவதை நாளடைவில் நாம் காணமுடியும்.

தினமும் ஒரு மணிநேரம், ஆரம்பத்தில் கூட்டும் பொழுது, நமது செயல்பாடுகளை குறித்து சிந்தித்தலும், திட்டமிடலும் நமக்கு சந்தர்ப்ப சூழல் அமைகின்றது. சாதாரணமாக சாதிக்க வேண்டும் என்று எண்ணினால், நமது வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்று எண்ணினால், தினமும் 1 1/2 மணிநேரம் செயல்படும் நேரத்தினைக் கூட்ட வேண்டும். அதாவது, 6 மணிக்கு பதிலாக 4 1/2 மணிக்கு எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

இதனால் ஒரு வாரத்திற்கு 7 x1-1/2 மணிநேரம் = 10-1/2 மணி நேரம் கூடுதலாக உருவாக்கி உள்ளோம். ஒரு வருடத்தில் 52 வாரங்களுக்கு மொத்தமாக சுமார் 546 மணி நேரம் – கூடுதலாக - உழைக்க / வருமானம் தேட, வாய்ப்பு கிடைக்கின்றது. இது சுமார் 68 வேலை நாட்களாகும். இரண்டு மாதங்களை ஒருவருடத்தில் கூட்டிவிட்டோம். இதுவே கூடுதலாக வருமானத்தினை கொண்டு வருகின்ற BREAD EARNING HOURSஎன்று ஆங்கிலத்தில் கூறப்படும் மனித வேலை நாட்கள்.

PERFECT PLANNING TO ACHIEVE GOAL